ஹேக் மக்கள் தீர்ப்பாயம் மூலம் எனது தந்தையின் மரணத்திற்கு யார் காரணம் என்பது உலகிற்கு தெரியவரும் – அகிம்சா விக்கிரமதுங்க

215 0

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள மக்கள் தீர்ப்பாயத்திற்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தனது முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்காக இலங்கை அரசாங்கத்தை ஹேக்கில் விசாரணை செய்யவுள்ள மக்கள் தீர்;பாயத்திற்கு ஆதரவை வழங்கி உண்மையை காப்பாற்றுவது குறித்து பெருமிதம் அடைவதாக அகிம்சா விக்கிரமதுங்க டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எனது தந்தையின் கொலைக்கு யார் காரணம் என்பது உலகத்திற்கு நிரூபிக்கப்படும்என பதிவிட்டுள்ள அகிம்சா விக்கிரமதுங்க இங்கு விடுபாட்டுரிமை இல்லை ஆகவே இறுதியாக எனது குடும்பத்திற்கு நீதிமன்றத்தை போல ஒனறு; கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்

உலகின் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் லசந்த கொலை விவகாரத்தை ஹேக்கிற்கு கொண்டு சென்றுள்ளன.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு நீதி வழங்குவதற்கான ஒரு முன்னொருபோதும் இடம்பெறாத முயற்சியாக உலகின் மூன்று முக்கிய ஊடக சுதந்திர அமைப்புகள் மக்கள் தீர்ப்பாயமொன்றை உருவாக்கியுள்ளன.

லசந்தகொலை குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் நோக்கத்துடன் இந்த ஊடக சுதந்திர அமைப்புகள் மக்கள் தீர்ப்பாயமொன்றை உருவாக்கியுள்ளன.

தீர்ப்பாயத்தின் விசாரணைகள் நவம்பர் இரண்டாம் திகதி ஹேக்கில் ஆரம்பமாகவுள்ளன