இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவில் கிழக்கு முதலிடம் வடக்கிற்கு இரண்டாமிடம்

260 0
fotorcreated-481நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு செய்தன் அடிப்படையில் 63.68 வீத வாக்குபதிவின் மூலம்   கிழக்கு  மாகாணம்முதலிடம் பெற்றுள்ளதோடு 43.69 வீத வாக்க பதிவின் மூலம்  வடக்கிற்கு இரண்டாமிடம்  கிடைக்கப்பட்டதோடு 41.02 வீத வாக்குபதிவில் ஊவா மாகாணம் மூன்றாமிடத்திலுள்ளது
அந்தவகையில்  வாக்கு பதிவின் அடிப்படையில் 85.14 வீத வாக்குபதிவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடத்திலும் 65.36  வீத வாக்குபதிவின் மூலம் மொணராகலை  மாவட்டம் இரண்டாமிடத்திலும்.
56.35வீத வாக்குபதிவின் மூலம் அம்பாறை மாவட்டம் மூன்றாமிடத்திலும் 55.44 வீத வாக்குபதிவின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் நான்காமிடத்திலும் 44.76வீத வாக்குபதிவின் மூலம்
மன்னார் மாவட்டம் ஜந்தாமிடத்திலும் 43.12வீத வாக்குபதிவின் மூலம் யாழ்ப்பாண மாவட்டம் ஆறாமிடத்திலும் உள்ளதோடு கிளிநொச்சி மாவட்டம் 32.51வீத வாக்குபதிவின் மூலம் பதின்மூன்றாமிடத்திலும் வவுனியா மாவட்டம் 24.33 வீத வாக்குபதிவின் மூலம் இருபதாமிடத்திலும் உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.