விடாமுயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்-உயிரியல் பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி

237 0
unnamedநடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி செல்வநாயகம் சுபநேத்ரா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
தனது வெற்றிப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த சுபநேத்ரா ,
எனது பெயர் செல்வநாயகம் சுபநேத்ரா,வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளின் படி நான் முஜ்ல்லைதீவு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதிப்பதற்கு அருளிய இறைவனுக்கு முதல் நன்றி கூறுகின்றேன்.
என்னுடைய இந்த வெற்றிக்கு எனது பாடசாலைக்கும்,ஆசிரியர்களுக்கும்,எனது குடும்பத்தார்க்கும் அர்ப்பணிக்கின்றேன்.
நான் இந்த வெறியை பெறுவதற்கு ஓர் நல் வழிகாட்டிகளாக என்னுடைய ஆசிரியர்களும் குடும்பத்தினருமாவார்கள்.
 உயர்தரம் என்பது வாழ்க்கையின் ஓர் முக்கிய படிக்கட்டாகும் இதுவே எம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.
எனவே நாம் எந்த துறையை எடுக்க வேண்டும் என முதலில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.தற்காலத்தில் சில மாணவர்கள் துறைக்கு துறை அடிக்கடி மாறுகின்றார்கள் ஆனால் நாம் எமக்கு பொருத்தமான துறையை தேர்ந்தெடுத்து அதில் எம் விடா முயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்.அப்போதே எம்மால் வெற்றியை பெறமுடியும்.
 போர் காலத்துக்கு பின் எமது பிரதேசத்தில் உயிரியல்,கணிதம்,தொழினுட்பம் போன்ற பிரிவுகளுக்கு நல்ல கல்வி இல்லை என்னும் ஓர் கருத்து நிலவுகிறது.
ஆனால் நான் கூறுவது என்னவெனில் எங்கு போனாலும் படிக்கவேண்டும்.நான் எனது சொந்த இடத்தை விட்டு வேறு எங்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு சென்றதில்லை எனது சுயமுயற்சியிலே எனது கல்வியை தொடர்ந்தேன்.
எனது துறையை பொறுத்தவரை படிப்பதுடன் முன்னைய வினாத்தாள்களின் பயிற்சியும் முக்கியமானதாகும். நாம் அதிகம் அதிகம் பிரத்தியேக வகுப்புக்களுக்கு சென்று படிக்கவேண்டும் என்று எண்ணி செயற்படுவோமேயானால் நாம் படிக்க வேண்டிய விடயங்களை விட்டு விடுவோம்.
உயிரியலை பொறுத்தவரை நம் படிப்பதற்கு மூலகாரணமாக கொள்ளவேண்டியது ஆசிரியர் வழிகாட்டியும்,கடந்தகால வினாத்தாள்களுமாகும்.
எனது வெற்றியின்மூலம் நான் வருங்காலத்தில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கூறுவது எல்லா விடயங்களையும் அறியவேண்டும் என அலைந்து திரியாது எமக்கு வேண்டிய விடயங்களை ஐயமின்றி அறிய முயலவேண்டும்.