உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

149 0

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகேயிருக்கும் புதூர் கிராமத்தில், 110 வாக்காளர்களின் பெயர் தவறுதலாக இணைக்கப்பட்டது. இதனால் அதில் உள்ள தவறை நீக்க வேண்டும். தவறுகளை நீக்கி புதிய பட்டியல் வெளியிடும் வரை உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கையில், சம்பந்தப்பட்ட 110 பேர் மற்றொரு வார்டில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தலில் வாக்களிக்க இயலாது என்ற நிலை இல்லை. ஆகையால் தேர்தலை நிறுத்த இயலாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தீர்ப்பளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.