கடனா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று அங்குவாழும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
வடமாகாண முதல்வருடன் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிதி சேர்நிகழ்வாக ‘முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது’ என்னும் இந்த நிகழ்வு Pearson Convention centerஇல் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை ரொறண்டோ சென்றார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ரொறண்டோ பெரும்பாகத்தின்மார்க்கம், பிரம்ரன் நகரங்களோடு வடபகுதியுடனான இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம் சார்ந்த மற்றும் கனடிய அரச மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 10ஆம் திகதி பிறம்டன் நகரசபையுனும், 14ஆம் திகதி மார்க்கம் நகர சபையுடனும் இரட்டை நகர உடன்படிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.