இலங்கைக்கு எதிரான கலந்துரையாடல் சென்னையில்

273 0

untitled-7ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க இந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் தயாராவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பிலான விசேட சந்திப்பு நாளை சென்னையில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நாடுகடந்த தமிழீழம் சார்பில் அதன் தலைவர் ருந்ரகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இலங்கை விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் ஒந்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ஒருபோதும் தயார் இல்லை என இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கடந்த தினத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.