இலங்கை போக்குவரத்து சபையின் 59 வருட வரலாற்றில் முதன் முறையாக இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தலைமையில் நடைபெற்ற பிராந்திய மாதாந்தக் கூட்டத்தில் இலங்கைப் போக்குவரத்து சபையால் 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்; தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இன்றைய கூட்டத்தில் இலங்கை போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், திறைசேரி பணிப்பாளர், பிரதேச நிறைவேற்று அதிகாரிகள், செயலாற்றல் பிராந்திய முகாமைளாயர், பொறியியல் பிராந்திய முகாமையாளர், பிரதான நிதி முகாமையாளர் மற்றும் இலங்கையின் சகல பிராந்திய முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.