உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் சார்பாக பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் கனடா சென்றடைந்த வடக்கு மாகாண முதலமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.