சீன பெண் இலங்கையில் பலி

316 0
Dead body with toe tag, under a white sheet
குருணாகல் – கலுகமுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் சீன நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சுற்றுலாப் பயணி வீதியை கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்தொன்றில் மோதியுள்ளார்

காயங்களுக்கு உள்ளான அவர் குருணாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைகள் பலன் இன்றி மரணித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.