வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

300 0

20131112_092732வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதி மொழிக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 27 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவருகின்றனர்.

எனினும் பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய பகுதிகள் உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படாத காரணத்தினால் அந்த பகுதிகளை சேர்ந்த பெரும் தொகையான மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளார்கள்.

இந்தநிலையில் குறித்த முகாங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி தனியான காணிகளில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சொந்த காணி இல்லாமல் முகாங்களில் தங்கியுள்ள குடும்பங்களுடைய விபரங்களும் பிரதேச செயலகத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் பலாலி, மயிலிட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது சொந்த காணிகளை தவிர்ந்த வேறு காணிகளில் குடியேறுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.