கொரோனா வைரஸ் (கொவிட் 19) காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக 7,947 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 கட்டங்களாக 5,000 ரூபா கொடுப்பனவினை செலுத்துவதற்காக வேண்டி 5,336 மில்லியன் ரூபாய்களும், 2000 ரூபா கொடுப்பனவினை செலுத்துவதற்காக வேண்டி 258 மில்லியன் ரூபாய்களும் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருட காலத்தினுள் தனிமைப்படுத்தப்பட்ட 80,370 குடும்பங்களுக்கு அவசியமான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய 10,000 ரூபா பெறுமதி வாய்ந்த சலுகை அட்டையினை (கூப்பனை) வழங்குவதற்காக 803 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசித்த 33,461 குடும்பங்களுக்கு வாரம் ஒன்றுக்கு 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை வழங்குவதற்காக 1,550 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.