வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் இளவாலையில் கைது

274 0

unnamed-25யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாளை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழு புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தியது.

இதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து, வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் காவல்துறை விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர்.