வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – லக்ஷ்மன் யாபா

293 0

3-450x253இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பி அவர் இதனைத் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணிய பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்த அரசாங்கம் உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் எதைச் சொன்னாலும், இலங்கையின் நீதித்துறை மீது அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.