மீள்திருத்ததுக்கு ஜனவரி 23க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம்

287 0

examination-departmentகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், பாடசாலை ஊடாக தோற்றிய மாணவர்களுக்கான மீள் திருத்த விண்ணப்பம், பரீட்சை பெறுபேறுகளுடன் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிப்பட்ட முறையில் தோற்றிய பரீட்சார்த்திகள், தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் அறிவித்தலுக்கு அமைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.