வாகன விபத்துகளில் நால்வர் பலி

292 0

accident-graphic-medium-720x480மத்தள மற்றும் கடுவெல பகுதியில் இடம்பெற்ற வாகன வித்துகளில் 4 பேர் பலியானர்

மத்தள வானூர்தி தள வீதியின் படவுகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் பலியானர்.

அத்துடன், ஒருவர் காயமடைந்தார்.

முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மரத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதேவேளை, கடுவெலயிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்தனர்.

கொங்கிறீட் கொண்டுசெல்லும் வாகனமொன்றும், சிறு லொறியொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.