வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லாத ஒரு அரசியல் அமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்தார்.