கடுமையான தீர்மானங்களை எடுப்பார் ஜனாதிபதி – லக்ஷ்மன் யாபா

299 0

laksh-720x450நாட்டினதும் கட்சியினதும் நலனுக்காக எதிர்காலத்தில் கடுமையான தீரமானங்களை ஜனாதிபதி எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சர்வாதிகார போக்குடன் செயற்பட்டதை ஸ்ரீ பதி சூரியராச்சி மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறெனினும், கட்சியின் நலன் கருதி எதிர்வரும் காலங்களில் உறுதியான சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதன்போது தம்மால் எடுக்கப்படும் சில தீர்மானங்கள் சிலருக்கு தாக்கம் செலுத்துவதாக இருக்கலாம்.

சிலர் அது குறித்து வேறு விதமாக சிந்திக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் ஜனவரி 8ஆம் திகதி மக்கள் தமக்கு ஆணை வழங்கினர்.

அதற்கான தீர்மானங்களை தாம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.