அபிவிருத்தியை சீர்குலைக்க நாமல் முயற்சி – சாகல குற்றச்சாட்டு

239 0

t1wkzltஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

ஹம்பாந்தோட்டை மக்களின் நலனுக்காக மட்டுமல்ல, முழு நாட்டு மக்களினதும் நலனுக்காக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

முன்னதாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக மூன்று பேர் மட்டுமே நன்மை அடையக்கூடியதாக இருந்தது.

ஆனால், நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் முயற்சிப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.