பலமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதை எவரும் தடுக்க முடியாது – ரணில்

265 0

dad1பலமிக்க புதிய இலங்கையை கட்டியெழுப்புவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாதென்றும், பலமிக்க நிரந்தர எதிர்காலம் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

2015 ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததுஇ நாட்டின் சாதாரண மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை கொடுப்பதற்கு. இளைஞர் யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்குவதற்கு. நாம் தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியது அதற்காகவே.

மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்த றுஹுனு பொருளாதார வலயம் தொடர்பில் குழுவொன்றை அமைக்க இருக்கின்றோம்.

றுஹுனு பொருளாதார வலயத்திற்காக 1235 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு காணிகளை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். 95 வீதமானவை அரசாங்கத்தின் காணிகளே.

நாங்கள் எதிர்பார்ப்பதுஇ கண்டியை விசாலமான நகராமாக்குவதற்கு. மேல் மாகாண நிதி நகரத்தை உருவாக்குவதற்கு. நவீன விவசாயம், சுற்றுலாஇ மீன்வளம், பொருளாதார வலயங்களை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இவை ஆரம்பம் மட்டுமே. மூன்றாவது ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நாங்கள் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.