ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் உள்ளடங்குவதாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்தவர்களே அதிகமானவர்கள் இருப்பதாக அவர் கூறினார்.
இன்று காலை ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மையில் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.