தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வரும்போது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.