இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்திய நிதி உதவியின் கீழ் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருநாட்டுப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இணை செயற்பாட்டு குழு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துகின்றது. இரு நாட்டு அமைச்சர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சந்திக்கின்றார்கள்.
இந்தச் சந்திப்புக்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.