உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

296 0

alevel-resகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

பெறுபேறுகளை முறையாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிடப்பட்ட இடத்தில் சரியாக சுட்டெண்ணை உள்ளடக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 784208 , 011 2784537, 011 3188350, 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் அவசியமாக இருப்பினர் 1911 என்ற துரித இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெற்றது.

பரீட்சையில் மொத்தமாக 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனர்