இலங்கை வரும் ஆந்திர முதல்வர்

276 0

12-1476243097-chandrababu-naidu-11600இந்தியாவின் ஆந்திரப்பிரதேச முதல்வரான ஸ்ரீ சந்திரபாபு நாயுடு இன்று இலங்கை வரவுள்ளார்.

இன்று மாலை அவர் இலங்கை வரும் இவர்,நாளை நடைபெறவுள்ள’எதிர்கால அபிவிருத்திக்கு இரண்டு வருட திட்டங்கள்’என்னும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்வதற்காகவே இலங்கை வரவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாளைய தினம் இவர் ஹோமாகம பிட்டிபன பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகத்தையும் பார்வையிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.