டரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க நாடாளுமன்றம்

292 0

usaநடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டரம்பின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் கூட்டுக் கூட்டத் தொடரின்போது அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பிடன் வெளியிட்டுள்ளார்.

ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பை அடுத்து சிறிய கட்சிகளை சேர்ந்த சில உறுப்பினர்கள் அமைதியற்று செயற்பட்டதையடுத்து அவைக் காவலர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது சம்பிரதாய ரீதியான அறிவிப்பாக கருதப்பட்டாலும்இ நாட்டின் ஜனாதிபதியை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் மரபாக அங்கு கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.