அதிமுக வின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் கட்சியின் சசிகலாவிற்கு இடையில் இன்று திடிர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும் சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக தந்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பி ஒப்படைத்திருந்த நிலையில் அவர் கட்சியை விட்டு விலகி திமுக வில் இணையப்போவதாகவும் வதந்திகள் வெளியானது
நாஞ்சில் சம்பத் அதிமுக வில் இருந்த விலகுவாதா வந்த தகவலையடுத்து சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென சந்தித்த பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளரிடம் பேசிய நாஞ்சில் சம்பத்.
நான் அதிமுகவில் தொடர்நது பயணிப்பேன் எனவும் சசிகலாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்