தடைகளையும் தாண்டி தியாக தீபத்திற்கு இளஞ்செழியன் முல்லைத்தீவில் அஞ்சலி..!

172 0

முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில்  தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன் இன்றைய தினம் (26) காலை 11 மணியளவில் மலர் தூபி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இலங்கையில் இந்திய இராணுவ தலையீட்டின் போது, 5 அம்ச  கோரிக்கையை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி முதல் நீராகாரமும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர் நீத்தார்.
இவருடைய 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினருக்கும் தடையுத்தரவு பெறப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன் இன்றைய தினம் (26) காலை 11 மணியளவில் மலர் தூபி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்

நேற்று (25)  பீற்றர் இளஞ்செழியனுக்கு அவரது தந்தையாரின் பெயரில் முல்லைத்தீவு நீதி மன்றினால்  வழங்க பட்ட கட்டளையினை வழங்க வந்த காவற்துறையினருக்கு இறந்த என் தந்தைக்கு உண்ணபிலவில் அமைந்துள்ள  கத்தோலிக்க சேமக்காலையில் சென்று வழங்குமாறும்  முல்லைத்தீவு தலைமை காவற்துறை அதிகாரி உள்ளிட்டவர்களை திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

பீற்றர் இளஞ்செழியனின் வீட்டை சுற்றி புலனாய்வளர்கள் , இராணுவத்தினர், காவற்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அறியமுடிகிறது