எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை நேற்றைய தினம் சமர்ப்பிக்கவிருந்ததாக எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம் அறிவித்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கையை பெற்றுக் கொள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா தயாராக இருந்ததாகவும், ஆனால் குழுவின் தலைவர் அறிக்கையை நேற்றைய தினம் சமர்ப்பிக்கவில்லை எனவும் அமைச்சு கூறியுள்ளது
இந்த அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கை நிறைவு பெறவில்லை என குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம் நேற்று அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
இந்த அறிக்கை இதற்கு முன்னர் அமைச்சரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், குழுவிலுள்ள இரண்டு உறுப்பினர்கள் கையொப்பமிடாமையினால் அதனை பெற்றுக் கொள்ள அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.