அறவழிப் போராட்டத்தால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த அற்புத மனிதன் தன் இனத்திற்காக தன வயிற்றில் போர் தொடுத்தான்.
பாரத தேசம் பார்த்தீபனை பட்டினியால் கொன்றது.ஆனால் அவனது பசியை விட அவனது மக்களின் விடுதலைப்பசி அவனை உரமூட்டியது.
இன்று உலகமே ”கோவிட்19” பெருந்தொற்றால் மடடுமல்ல பட்டினியாலும் சாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
உலகம் தனித்திருக்கிறது…….பசித்திருக்கிறது……..
” இந்திய அமைதிப் படையிடம்” ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்தியா திலீபனின் தியாகத்தை மதிக்கவில்லை. செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் தியாகச் சாவடைந்தார்.
உண்ணா நோன்பு மேடையில் தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரை எமக்கான வேதம்.
“என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயாராகிவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.
நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.
நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.
இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று பேசி முடித்தார்.
தாகத்துடன் இருந்து புலிகளின் தாகத்தை இறுதியாக கூறி சென்ற தியாகியின் கனவை நினைவாக்குவோம்.