ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம் ஒன்று நேற்று இரவு ஹற்றன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம் ஒன்று நேற்று இரவு ஹற்றன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பளியூ.ஜேரணசிங்க மற்றும் தர்மபிரியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரித் பிரயாணத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியன காலநிலையை அடுத்து ஆறுகள், ஓடைகள், நீருற்றுக்ள நீர்த்தேக்கங்கள் வற்றிப் போய் உள்ளன.மழை வேண்டியும் விசேட பிரார்தனைகள் இடம்பெற்றதுடன் பிரித் பிரயாணத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்ட புனித நீர் நீர்தேக்கங்களிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் தெளிக்கப்பட்டன.
16 பௌத்த மதகுருக்கள் கலந்து கொண்ட இப்பிரித் பிரயாணத்தினை நடாத்தி வைத்தனர்.இந்நிகழ்வுக்கு ஹற்ற் டிக்கோயா நகரசபையின் பதில் செயலாயர் பிரியதர்ஷினி, உட்பட ஊழியர்கள் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.