சிரியாவின் மக்கள் நடமாட்டம் உள்ள ஜிபிலே நகரில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள குறித்த நகரத்தில் இந்த கார் குணடுத் தாக்குதலினால் 25 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சிரிய தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நகரத்தில் உள்ள மைதானம் ஒன்றிட்கு அருகிலேயே இந்த குண்டுத்தாக்கதல் இடம்பெற்றுள்ளதாகவும்,இது ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் எனவும் சிரிய அரச சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பொதுமக்களா? சிரிய அரச ஆதரவாளர்களா? இராணுவத்தினரா என்று குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது இந்த நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.