யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம்

319 0

jhc_logoயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

கணிதத்துறை 3ஏ சித்திகளைப் பெற்று கஜரோகணன் கஜானன் என்றமாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கணித துறையில் இரவீந்திரன் பானுப்பிரியன் மூன்றாம் இடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தன் நான்காம் இடத்தையும்,

செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தெரிவித்துள்ளார்.

உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் யோகந்திரராசா சாகித்தியன் நான்காம் இடத்தையும் திருமாறன் இளமாறன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.