நுவரெலியா தோட்டப் பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு (காணொளி)

327 0

hationநுவரெலியா தோட்டப் பகுதிகளில், பதிவு செய்யப்பட்ட 49 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்ற மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் குறித்த நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோருடன் முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.அருள்சாமி, அனுஷியா சிவராஜா, நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தோட்டப்பகுதி இளைஞர் கழகங்களுக்கான கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள், ஆலயங்களுக்கான நாட்காலிகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.