மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு சேவை

474 0

மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு விமானப் போக்குவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 10, 2016) ஆரம்பித்து வைத்தார்.சிவில் விமானப் போக்கு வரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளுர் விமானப் போக்குவரத்து இன்றியமையாதது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம் வலியுறுத்தி வந்ததற்கு அமைவாக இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதிமைச்சர் எம்.எஸ். அமீPரலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர், பிரதித் தவிசாளர், ஏயார் மார்ஷல் ஜீ.பி. புளத்சிங்ஹல, உட்பட இன்னும்பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

a b DSC06592 DSC06616 DSC06629 DSC06637 DSC06656 DSC06661