ஓட்டலில் அனுமதி மறுப்பு: சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்

196 0

ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. சபை பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு அருந்த சென்றார்.

ஆனால் அந்த ஓட்டலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உணவு அருந்த முடியும் என்பதால் ஜெய்ர் போல்சனரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, ஜெய்ர் போல்சனரோ தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் ‘பீட்சா’ வாங்கி சாப்பிட்டார்.

ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.