அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

300 0

anura-senanayakeமுன்னளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பான வழக்கில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியல் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கீ உத்தரவிட்டுள்ளார். சுமித் பெரேராவிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக அரச பிரதி சொலிசுட்டர் ஜெனரல் டிலான் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். வசீம் தாஜூடீனின் வாகனத்தில் மற்றுமொருவர் பயணித்திருந்தார் எனவும் அவர் பற்றிய தகவல்களை திரட்டிக்கொள்ள இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.