மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் மீது பூரண நம்பிக்கையுண்டு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பிலோ அல்லது அவரது நடவடிக்கைகள் தொடர்பிலோ எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் மத்திய வங்கி சிறந்த முறையில் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுனர் குமாரசுவாமி அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில் நிதி அமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.