அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள உத்தேச முதலீட்டு வலயம் மற்றும் துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் நாளைய தினம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடைவிதித்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் இந்த தடையுத்தரவை 26 பேருக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.