ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

338 0

201701070554280565_isis-militants-kill-4-soldiers-near-iraq_secvpfஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரின் தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தார்கள்.

ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு திக்ரித் நகர் அருகேயுள்ள அல் தவுர் நகரில் உள்ள ராணுவ சாவடி மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகளையும், கார் குண்டுகளையும் பயன்படுத்தி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகளும், 2 வீரர்களும் உயிரிழந்தார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தார்கள்.இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் அமைந்துள்ள போலீஸ் நிலையம் மீது அவர்கள் தீ வைத்து விட்டு தப்பினர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.இதற்கிடையே சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை குறி வைத்து துருக்கி படையினரும், கிளர்ச்சியாளர்களும் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில், ஐ.எஸ். இயக்கத்தினர் 32 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.