புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள லவுடெர்டேலே விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் விமான நிலையத்தில் இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவன் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விமான நிலையத்திற்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் 20 வயதுமிக்க இளைஞர். ஸ்டார் வார்ஸ் டி-சார்ட் அணிந்து இருந்தார். துப்பாக்கி குண்டுகளை மீண்டும் நிரப்ப முயன்ற போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.