முல்லைத்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு கடந்த வருடத்தில் 5755 மில்லியன் ரூபா ஒதுக்கீடு(காணொளி)

360 0

new-pictureமுல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில், 5755 மில்லியன் ரூபர் கிடைக்கப்பெற்றது என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த  2016, ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், அதற்காக கிடைக்கப்பெற்ற நிதியுதவியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நடப்பாண்டில், முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு தெளிவுட்டும்  கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட செயலர்; ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த ஆண்டு 5755 மில்லியன் ரூபாய் நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கு கிடைக்கப்பெற்றது. இந்நிதிகளில் இருந்து பல்வேறு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 5236 மில்லியன் ரூபாய் நிதி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மாகான மற்றும் மத்திய அரசின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்நிதி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்டச் செயலர் தெரிவித்தார். –