சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்பு- நசீர் அகமட்(காணொளி)

340 0

cm-esசிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டத்தின் முன்னோக்கிய நகர்வினைக் குழப்புவதற்கான சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தாங்கள் தெளிவாகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.