சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண விஜயம்(காணொளி)

337 0

17யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவினால் பார்வையிடப்பட்டன.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண சாவகச்சேரி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டதுடன், கடமைகளையும் பார்வையிட்டார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித்த சில்வா மெனிக்கே தலைமையில் இன்று நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் துசித்தகுமாரவும் பிரசன்னமாகியிருந்தார்.