வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடிய கும்பல்

208 0

மது போதையில் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்கள் அனை வரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து பொலிஸார் விசாரணை முன்னெடுத் துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று மாலை 6.30 மணி அளவில் மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனை வரையும் கடுமையாகத் தாக்கி சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டின் உரிமையாளரை கடுமையாகத் தாக் கிய காரணமாகப் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் பள்ள மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரையும், 15 வயதுடைய மாணவி ஒருவரையும் குறித்த குழு தாக்கியுள்ளதுடன், குறித்த இரு யுவதிகளும் தற்போது பள்ள மடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர் கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் காரணமாக வீட்டில் உள்ள இரு குழந்தை கள் அச்சமடைந்துள்ள நிலையில் உள்ளதாகவும்தெரிவிக்கப் படுகின்றது.

மேலும் குறித்த வீடு கடுமையாகத் தாக்கப்பட்டுச் சேத மடைந்துள்ளது. நேற்றைய தினம் இரவு குறித்த பகுதிக்குச் சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ள தோடு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.