அரசாங்கத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை

316 0

 

download-5வட மாகாண சபை தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் ஹெட்டிகல்லே விமலசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண சபையின் அவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிக்காத பட்சத்தில்,தாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.