யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பாக இன்று காலை யாழ்ப்பாபல்கலைக்கழகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இரண்டாயிரத்து 151 மாணவர்கள் பட்டங்களையும், பட்ட சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் முதலாம் நாள் 5 அமர்வுகளாகவும், 2ஆம் நாள் 4 அமர்வுகளாகவும் இடம்பெறவுள்ளதாகவும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்துள்ளார்.