ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹொரணை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வொக்ஸ் வெகன் நிறுவனம் குறித்து சர்ச்சையொன்று காணப்படுகின்றமையினால், அந்த நிறுவனத்தின் முதலீடை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கார்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையொன்றே குளியாபிட்டியவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், வொக்ஸ் வெகன் கார்களும் அங்கு சேகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.