தெலுங்கானாவில் ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போன கணேசர் கோவில் ‘லட்டு’

275 0

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர்.

தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் பிரசித்தி பெற்ற கணேசர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில், கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த ஏலம் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு நேற்று ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ.18.90 லட்சம் என்ற உச்ச விலைக்கு லட்டு ஏலம் போனது.

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர். பாலாபூர் கணேசர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தெலுங்கானா கல்வி மந்திரி சபிதா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.