பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது- ஓ.பன்னீர்செல்வம்

318 0

 

download-1பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் 10 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே தமிழக முதலமைச்சர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் சிறந்த முடிவொன்று எட்டப்படும் என தமிழக மீனவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தியை இந்தியா, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்