மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுதலை(காணொளி)

368 0

mannar-indian-meenaமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 12 இந்திய மீனவர்களும், கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி தலைமன்னார் தென் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 12 இந்திய மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மன்னார் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறகோரி விக்ரர், பிச்சையா லிபோர், விக்ரர் அஐpத்குமார், அ.வினோத்குமார், வி.அமலன், பி.பிறவின், ஐயக்குமார் வெற்றிவேல், இ.கிறிஸ்ரி, சே.பிச்சை, ஆ.பாண்டியராஐ, ப.மலையாண்டி, மை.மரிய அந்தோனி ரீகன் ஆகிய இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.